மத்திய அமெரிக்க நாடான பெலிஸில் சிறிய ரக பயணிகள் விமானத்தைக் கத்தி முனையில் கடத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பெலிஸ் எல்லையில் உள்ள கோரோஷல் எனும் சிறிய நகரில் இருந்து சுற்றுலா தலமான சான் பெட்ரோவுக்கு 14 பயணிகள் மற்றும் 2 விமானிகளுடன் சிறிய ரக விமானம் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது.
அப்போது அதில் பயணித்த அமெரிக்காவைச் சேர்ந்த அகின்யேலா சாவா டெய்லர் என்பவர் கத்திமுனையில் விமானத்தைக் கடத்தினார். இதனையடுத்து அங்கிருந்த சுற்றுலாப் பயணி ஒருவர், தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் அகின்யேலாவை சுட்டுக் கொன்றார். இந்த சம்பவத்தில் விமானி உட்பட மூவர் கத்திக் குத்தால் காயமடைந்தனர்.