உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாக இருந்தால், திமுக நீட் தேர்வை எதிர்ப்பது ஏன்? என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்திய அரசு எந்த மொழியையும் கட்டாயபடுத்தவில்லை என தெரிவித்தார். தனியார் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பிற மொழிகள் ஏன் அரசுப்பள்ளிகளில் இல்லை என கேள்வி எழுப்பிய அவர், ‘பிறமொழிகள் கற்பிக்க அரசுப்பள்ளிகளுக்கு ஏன் அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் வினவினார்.
”உச்சநீதிமன்ற தீர்ப்பை திமுக மதிப்பதாக இருந்தால், நீட்டை எதிர்ப்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.