தெலங்கானா மாநிலம் கரீம் நகரில் குரங்குகள் தாக்கியதில் மூதாட்டி ஒருவர் காயமடைந்தார்.
கரீம் நகர் சாலையில் மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது அங்கிருந்த குரங்குகள் அவரின் ஆடையை பிடித்து இழுத்தன. இதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார்.
மூதாட்டியின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், குரங்குகளை விரட்டியடித்தனர். முன்னதாக, பெரிகேடு பகுதியில் குரங்கு கடித்ததில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.