அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற டிரம்ப்புக்கு எதிராக அந்நாட்டில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
வெளிநாட்டவர் வெளியேற்றம், அரசு ஊழியர்கள் பணிநீக்கம், கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தம் ஆகியவை மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை எதிர்த்து நியூயார்க், வாஷிங்டன் ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது அவர்கள் அதிபர் டிரம்புக்கு எதிரான பதாகைகளை ஏந்தி வெள்ளை மாளிகையையும் முற்றுகையிட முயன்றனர்.