பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் பிரிவு கட்சியைச் சேர்ந்த கேல் தாஸ் என்பவர் சிந்து மாகாணத்தில் மத விவகாரத்துறை அமைச்சராக உள்ளார்.
இவர் தாட்டா என்ற பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, பாகிஸ்தான் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள், அமைச்சர் காரின் மீது தாக்குதல் நடத்தினர். இதில் அவர் காயங்களின்றி உயிர் தப்பினார்.
இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.