தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலையில் கயிறு கட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெண்ணிலங்கபுரம் பகுதியில் இரு சமூகத்தினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், காயமடைந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததாகக் கூறி, அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.