நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சாலை அமைத்துத் தராததைக் கண்டித்து, கிராம மக்கள் அரசு வழங்கிய ஆவணங்களை ஆட்சியருக்கு அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பாள் நகர் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட வீடுகளில் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் சாலை வசதி ஏற்படுத்தித் தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சாலை அமைத்துத் தரக்கோரி அப்பகுதி மக்கள் அரசு வழங்கிய ஆவணங்களைத் தபால் மூலம் ஆட்சியருக்கு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.