கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உடல் நலக்குறைவால் வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானைக்குச் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட கூத்தாமண்டி பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை விவசாய நிலத்தில் தஞ்சம் புகுந்துள்ளது.
உடல் சோர்வுடன் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வரும் அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் யானைக்குச் சிகிச்சை அளிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.