கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான கன்னுக்குட்டி மற்றும் தாமோதரன் ஆகிய இருவருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த வழக்கில், 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், கன்னுக்குட்டி, தாமோதரன் ஆகிய இருவரும் பிணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது இருவருக்கும் பிணை வழங்கக் கூடாது என சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது 10 மாதங்களுக்கும் மேல் சிறையில் இருப்பதால் பிணை வழங்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
மனுதாரர் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கன்னுக்குட்டி, தாமோதரன் ஆகிய இருவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் கன்னுக்குட்டி, தாமோதரன் ஆகிய இருவரும் விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.
			















