சீனாவில் ரோபோ விவசாயப் பணியில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாகச் சீனா திகழ்கிறது. இங்கு ரோபோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.
புதிது புதிதாக ரோபோக்களை வடிவமைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.
இதை வைத்து பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், செடிகளை நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவதற்காக மருந்து தெளிக்கும் பணியில் ரோபோ ஈடுபட்டுள்ளது. இந்த வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது.