பாகிஸ்தானில் கடும் வெயில் வாட்டி வருகிறது. கராச்சியில் வெப்பம் இயல்பை விட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது.
வெயில் கொளுத்துவதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். பலர் உடல்நல பாதிப்புகளைச் சந்தித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் 41 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகப் பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் மக்கள் போதிய தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.