சீனாவில் ரோபோக்கள் இணைந்து கால்பந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவில் ரோபோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. புதிது புதிதாக ரோபோக்களை வடிவமைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.
அவை மாரத்தான், வீட்டு வேலை, நடனமாடுதல் போன்றவற்றில் ஈடுபடுகின்றன. அந்தவகையில், ரோபோக்கள் ஒன்றாக இணைந்து கால்பந்து விளையாடின. இந்த வீடியோ இணையவாசிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.