திருப்பதி மலையில் தீவிரவாத செயல்பாடுகள் தடுக்கும் விதமாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பதி மலை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆக்டோபஸ் அதிரடி படையின் 200 வீரர்கள் திருப்பதி மலையில் நிரந்தரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து திருப்பதி மலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆக்டோபஸ் அதிரடி படையினர் சுதர்சன் சத்திரத்தில் தீவிரவாத தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.