மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற ஏடிவி வாகனங்களுக்கான போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி முதலிடம் பிடித்தது.
சென்னை ஓஎம்ஆர் சாலை செம்மஞ்சேரியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் துறை மாணவர்கள் குறைந்த எடையுடைய வாகனத்தை உருவாக்கினர். அண்மையில் போபாலில் நடைபெற்ற Aravalli terrain competition போட்டியில், இவர்கள் உருவாக்கிய எலெக்ட்ரிக் வாகனம் 4வது இடமும் மற்றும் பெட்ரோலில் இயங்கும் வாகனம் 6வது இடமும் பிடித்தது.
இந்நிலையில், குறைந்த எடையுடைய வாகனம் ராணுவம், விவசாயத்திற்கு பயன்படுத்தலாம் என பொறியியல் கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த வாகனங்கள் கரடு முரடான, கடற்கரை மற்றும் பாலைவன பகுதிகளிலும் இயக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.