திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ரேஷன் கடை பருப்பில் கலப்படம் கண்டறியப்பட்டது தொடர்பாக 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சுள்ளெரும்பு பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில், பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படவிருந்த பருப்பில் கலப்படம் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் சக்கரபாணி மற்றும் ஐஏஎஸ் அதிகாரி சண்முக சுந்தரத்திடம் ஆட்சியர் சரவணன் புகாரளித்தார்.
இதுதொடர்பாக மதுரை மண்டல அதிகாரி லியோ ராபர்ட், உணவுப் பொருள் சேமிப்பு கிடங்கு மேலாளர் ஆனந்த் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கிடையே சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.