பஹல்காம் தாக்குதலுக்கு நடிகை ராஷி கன்னா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தாக்குதல் தொடர்பான சில வீடியோக்களை தான் பார்த்ததாகவும், அது இதயத்தை உடைக்கும் வகையில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
தீவிரவாத தாக்குதலை எதிர்த்துப் போராடி வலுவுடன் மீண்டு வருவோம் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.