பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 13ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக கோவை மகிளா நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி நந்தினி தேவி அறிவித்துள்ளார். அதன்படி மே 13 ஆம் தேதி வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.