கனிம வளக்கொள்ளை என்ற பெயரில் விவசாயிகள் மீது லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பதாகக் கூறி கோவையைச் சேர்ந்த விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட மாதம் பட்டி, ஆலாந்துறை, மத்துவராயபுரம், தேவராயபுரம், வெள்ளி மலைப்பட்டினம், நரசிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் கனிம வளம் கொள்ளை போவதாகக் கூறி அப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் தங்களின் நிலத்தைச் சமன் செய்யும் பணியில் ஈடுபட்டாலும் அபராதம் விதிப்பதாகக் குற்றம்சாட்டினர். இதனைத் தொடர்ந்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.