சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலினின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வில், மானிய கோரிக்கைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசு பார்ட் 1-தான், 2026-ல் திராவிட மாடலின் 2.O வெர்சன் வரும் எனத் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியின்போது தமிழகம் ஊர்ந்து சென்றுகொண்டிருந்ததாகவும் விமர்சித்தார். இதையடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக ஆட்சி ஊர்ந்து சென்றதாகக் கூறிய முதலமைச்சரின் கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
உடனே குறுக்கிட்ட முதலமைச்சர், ஊர்ந்து என்பதை மாற்றித் தவழ்ந்து எனப் போட்டுக் கொள்ளுங்கள் என விமர்சனம் செய்தார். இதையடுத்து முதலமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.