தமிழக – கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு திருவிழாவை முன்னிட்டு இருபிரிவினர் கொடியேற்ற முயன்றதால் நிகழ்ச்சியை நடத்த காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தேனி மாவட்டம் தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி முழு நிலவு திருவிழா இருமாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறுவது வழக்கம்.
சித்ரா பௌர்ணமி முழு நிலவு திருவிழா கொடியேற்றும் நிகழ்ச்சி கூடலூர் அருகே உள்ள அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நடப்பாண்டு கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு திருவிழா கொடியேற்ற நிகழ்வுக்கு அறக்கட்டளை நிர்வாகிகள் இருபிரிவாக வந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர்.
இதனை அறிந்த காவல் மற்றும் வனத்துறையினர் இருபிரிவினருக்கு அனுமதி மறுத்துக் கொடியேற்ற நிகழ்விற்குத் தடை விதித்தனர். மேலும், கோயிலுக்குச் செல்லும் நுழைவுவாயில் பகுதியை அடைத்து ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.