தாய்லாந்தில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி வெளியாகியுள்ளது.
கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடல் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் நீர்த்தாரைகள் எனப்படும் இந்த அதிசய நிகழ்வு ஏற்படும்.
பொதுவாகப் பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும். மீண்டும் இரண்டு காற்றுகளின் வெப்பநிலையும் சமமாக மாறும் போது, நீர்த்தாரைகள் மறைந்து விடும்.
அந்தவகையில், தாய்லாந்தின் ஃபுக்கெட்டில் உள்ள கடற்பகுதியில் நீரை மேகம் உறிஞ்சியது. இந்த அரிய நிகழ்வை விமானத்திலிருந்தவாறு பயணிகள்
கண்டு ரசித்தனர்.