அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லத்திற்கு வருகைதந்த நடிகர் ரஜினிகாந்த் அவரது மகனுக்குத் திருமண வாழ்த்து தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும் தலைமை நிலை செயலாளருமான எஸ்பி வேலுமணியின் மகன் விஜய் விகாஸுக்கு தீக்ஷனா என்பவருடன் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கச் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள எஸ்பி வேலுமணியின் இல்லத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றார்.
அப்போது அவருக்குப் பூங்கொத்து கொடுத்து வேலுமணியின் குடும்பத்தினர் வரவேற்றனர். இதையடுத்து மணமக்களை வாழ்த்திய ரஜினிகாந்த், அவர்களுக்கு நினைவுப் பரிசை வழங்கினார்.