சர்வதேச சட்டத்தை மீறி ரஷ்யாவுக்கு ராணுவ வீரர்களை அனுப்பியதாக வடகொரியா மீது தென்கொரியா குற்றம்சாட்டி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குர்ஸ்க் பிராந்தியத்தைக் கைப்பற்ற உதவிய வடகொரியாவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நன்றி தெரிவித்திருந்தார்.
ஆனால், சர்வதேச சட்டத்தை மீறி ரஷ்யாவுக்கு ராணுவ வீரர்களை அனுப்பியதாக வடகொரியா மீது தென்கொரியா குற்றம்சாட்டி உள்ளது.
ரஷ்யாவுக்கு ராணுவ வீரர்களை அனுப்பியதாக உக்ரைன் முன்னரே குற்றம் சாட்டி இருந்தது. ஆனால் வடகொரியா தரப்பில் இதற்கு எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.