செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு ஆய்விற்காக வந்த பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் எஸ் அருண்ராஜ் இயக்கிப் பார்த்து சோதனை மேற்கொண்டார்.
மாணவ, மாணவிகள் பயணிக்கும் வாகனங்களில் இருக்கும் அவசர வழி கதவு, படிக்கட்டுகளின் உயரம், உறுதித் தன்மை உள்ளிட்டவற்றை கேட்டறிந்த ஆட்சியர் பின்னர் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை இயக்கினார்.
ஆய்வுக்கு வந்த வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 37 வாகனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை.