வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவை முன்னிட்டு நள்ளிரவு நடந்த பூங்கரகம் ஊர்வத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கோபாலபுரம் பகுதியில் உள்ள கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. சிரசு திருவிழா முன்னிட்டு கோயிலில் நள்ளிரவு காப்பு கட்டும் நிகழ்ச்சி வாணவேடிக்கையுடன் சிறப்பாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பூங்கரகம் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் மேள தாளங்கள் முழுங்க ஊர்வலமாக கெங்கையம்மன் கோயிலுக்கு எடுத்துவரப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.