மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 2 ஆயிரத்து 999 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.
மத்திய அரசின் நூறுநாள் வேலைத்திட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 740 மாவட்டங்களில் 13 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனாளிகளாக உள்ளனர். அந்த திட்டத்தில் பணியாற்றுவோருக்கான ஊதியம் வழங்குவதற்காக நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அந்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழகத்திற்கு 2 ஆயிரத்து 999 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.