இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அமைச்சர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு பகுதிக்குப் பயணம் மேற்கொண்ட அவர், மீனவ சங்க பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது இந்திய மீனவர்களின் நுழைவு காரணமாக தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவ சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதற்குப் பதிலளித்த ராமலிங்கம் இந்திய மீனவர்களைத் தடுப்பது தொடர்பாகக் கடற்படையினருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.