புதிய அட்டவணைப்படி கூடுதல் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவை இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவையை கடந்த 19ஆம் தேதி தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியது.
ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து மற்ற தினங்களில் இந்த சேவை இயக்கப்படும் என்றும்,
இந்த சேவை தொடர்பாக கடந்த 24ஆம் தேதி வரை வாட்ஸ் ஆப் மூலம் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதில், காலை மற்றும் மாலை நேரங்களில், கூடுதல் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவையை இயக்குமாறு பலரும் கோரிக்கை முன்வைத்ததாக கூறப்பட்டது. மேலும், திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணை மே 2ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டது.
அதன்படி, புதிய அட்டவணைப்படி கூடுதல் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவை இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில்களில் டிக்கெட் விலை குறைந்தபட்சம் 35 ரூபாயாகவும், அதிகப்பட்சமாக 105 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.