துபாயில் இருந்து ஹைதராபாத்திற்குக் கடத்தி வரப்பட்ட மூன்றரை கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஒருவரிடம் 3 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்றரை கிலோ தங்கக் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தங்கத்தைக் கைப்பற்றிய அதிகாரிகள், பயணியையும் அவருக்கு உதவியதாக விமான நிலைய தூய்மைப் பணியாளர்கள் இருவரையும் கைது செய்தனர்.