திருப்பதியில் பெண்களை ஏமாற்றி நகைகளைப் பறித்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையைச் சேர்ந்த சங்கர் ராவ் என்பவர் ஏழுமலையான் கோயிலில் சுமங்கலி பூஜை செய்வதாகக் கூறியுள்ளார்.
3 பெண்களின் மாங்கல்யம் உள்ளிட்ட நகைகளை வாங்கிய அவர், கோயில் குளத்தில் குளித்துவிட்டு வருமாறு அவர்களிடம் கூறியுள்ளார். அதனை நம்பிய பெண்கள் குளித்துவிட்டு சங்கர் ராவுக்காகக் காத்திருந்தனர்.
ஆனால் அவர் நீண்ட நேரம் வராத நிலையில் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதேபோல் பல பெண்கள் புகார் அளித்த நிலையில், சிசிடிவி காட்சி அடிப்படையில் சங்கர் ராவை போலீசார் கைது செய்தனர்.