நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி நேரில் ஆஜராக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் சுமார் 988 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
இந்த சூழலில் ராகுல் மற்றும் சோனியா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், இருவரும் மே.8ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.