டெல்லியில் விடிய விடியக் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், இந்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மகிழ்ச்சியடைந்தனர்.
சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்த நிலையில், விமானச் சேவையும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.