அமெரிக்கா உக்ரைன் இடையே புதிய கனிமவள ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
உக்ரைனின் அரியவகை கனிமவளங்களை வெட்டி எடுக்கும் உரிமையைக் காலவரையின்றி வழங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
அண்மையில் வாடிகனில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி – டிரம்ப் இடையிலான பேச்சுவார்த்தை இதற்கு வழிவகுத்தது.
அதன்படி கனிமவள ஒப்பந்தத்தில் அமெரிக்கக் கருவூல செயலாளர் ஸ்காட் பெசெட் மற்றும் உக்ரைன் துணைப் பிரதமர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவை உக்ரைனின் மதிப்புமிக்க அரிய பூமி தாதுக்களான டைட்டானியம், யுரேனியம், லித்தியம் போன்றவற்றைப் பெற அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.