தமிழகம் முழுவதும் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு மற்றும் ஒப்பாரி வைக்கும் போராட்டங்கள் நடைபெற்றன.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஒரு மாத கோடை விடுமுறையை முழுமையாக வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், நீண்ட நாட்களாக பணியாற்றி வரும் அங்கன்வாடி ஊழியர்களுக்குப் பணி நிரந்தரம் செய்து தர வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாகக் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாகக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு முழுவதும் போராட்டத்தைத் தொடர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் இன்றும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.