அமேசான் நிறுவனம் தனது புதிய கிண்டில் பேப்பர்வைட்டின் அப்டேட்டட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது பெரிய டிஸ்ப்ளே, வேகமான செயல்திறன் மற்றும் மிகவும் கச்சிதமான கட்டமைப்புடன் வருகிறது. புதிய கிண்டில் பேப்பர்வைட் ஆனது இந்தியாவில் 16,999 ரூபாய் என்ற விலையில் அமேசான் இந்தியா ஸ்டோரில் கிடைக்கிறது.
இது ஒற்றை கருப்பு வண்ண விருப்பத்தில் வழங்கப்படுகிறது. எனினும், வாடிக்கையாளர்கள் இ-புக் ரீடருக்கான கவர்களை பிளாக், மரைன் கிரீன் மற்றும் துலிப் பிங்க் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் ரூ.1,999 விலையில் வாங்கலாம்.