சீனாவின் பொழுதுபோக்கு செயலியான டிக் டாக்குக்கு 5 லட்சத்து 6ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டிக் டாக் ஐரோப்பிய பயனியர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கத் தவறியதாகவும், பாதுகாப்பு விதி மீறல்களில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
ஐரோப்பியப் பயனர்களின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்துக் கடந்த 4 ஆண்டுகளாக விசாரணை நடத்திய நிலையில் டிக் டாக் செயலிக்கு 5 லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்து ஐரோப்பிய யூனியன் நேற்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய டிக் டாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா மற்றும் அமெரிக்காவில் ஏற்கனவே டிக் டாக் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.