ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட மண்சரிவால் பல கிலோமீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
ரம்பன் பகுதியில் உள்ள சம்பா செரியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மண், கற்கள் உள்ளிட்டவை சரிந்து விழுந்தன.
இதன் காரணமாகச் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கிலோமீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து சாலையைச் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.