கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உப்பு உற்பத்தி தீவிரமடைந்துள்ளது.
மரக்காணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் அமைந்துள்ளன.
இந்த உப்பளங்களில் இருந்து ஆண்டு தோறும் சுமார் 30 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தொடங்கும் உப்பு உற்பத்தி அக்டோபர் மாதம் வரையில் நடைபெறும். அந்த வகையில் கோடை வெயில் தாக்கத்தால் அனலுடன் கூடிய தரைக்காற்று வீசி சாதகமான காலநிலை நிலவுவதால் உப்பு உற்பத்தி தீவிரமடைந்துள்ளது.