படப்பிடிப்புக்காகக் கொடைக்கானல் சென்றுள்ள நடிகர் விஜய், அங்கு 3வது நாளாக ரோடு ஷோ நடத்தினார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிக்குடி பகுதியில் ஜனநாயகன் படம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
3-ம் நாளாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார். காலையில் படப்பிடிப்புக்காக மலைப்பகுதிக்குச் சென்ற விஜய், படப்பிடிப்பு முடிந்து தங்கியிருக்கும் ஓட்டலுக்குத் திரும்புவதை எதிர்பார்த்து மீண்டும் சாலையின் இரு புறங்களிலும் காத்திருந்து விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, தண்டிக்குடி கிராமப்பகுதியில் திறந்த வெளி வாகனத்திலேயே விஜய் பயணம் செய்து அங்கிருக்கக் கூடிய மக்களிடம் ரோஜா உள்ளிட்ட மலர்களை வாங்கி சென்று பொது மக்களுடன் கைகுலுக்கி விடுதிக்குச் சென்றார்.