ராமர் ஒரு புராண கதாபாத்திரம் எனக் கூறிய ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த ராகுல் காந்தி, அங்குள்ள பிரவுன் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, புத்தர், குருநானக், காந்தி, அம்பேத்கர் உள்ளிட்டோர் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியதாகவும், ராமர் போன்ற புராண கதாபாத்திரங்களும் அதைதான் போதித்ததாகவும் தெரிவித்தார்.
இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் செஷாத் பூனாவாலா, இந்துக்களையும், ராமரையும் அவமதிப்பது காங்கிரசின் அடையாளமாக மாறிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.