நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை நடத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், நாளை போர்க்கால ஒத்திகை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வான்வெளி தாக்குதல் நடைபெறும்போது ஒலிக்கப்படும் அபாய ஒலி சைரன்களை ஒலிக்கவிட்டு ஒத்திகை நடத்தவும் எதிரி படைகளின் தாக்குதலின்போது தேவைப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களைப் பாதுகாப்பது குறித்து பயிற்சி அளிப்பது போன்ற ஒத்திகை நடத்துமாறும் அவசரக் காலத்தில் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து ஒத்திகை மேற்கொள்ளுமாறும் மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.