அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மியாமி கடற்கரையில் 30க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர், படகு சவாரி செய்துகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்றுகொண்டிருந்த ஆடம்பர லம்போர்கினி படகு எதிர்பாராத விதமாகக் கடலில் கவிழ்ந்தது.
இதுகுறித்து தகவலறிந்த கடலோர காவல்படை மற்றும் மீட்புக் குழுவினர், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டனர். விபத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.