இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக அந்நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், ஜம்மு, சம்பா, கதுவா, ரஜோரி, பூஞ்ச் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதேப்போல பாகிஸ்தான் அரசும் எல்லைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.