போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 8 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மாதம் நடத்தப்பட்ட பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கையில் பாகிஸ்தானில் முகாமிட்டிருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி பூஞ்ச், ரஜோரி உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.
குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 8 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்திய அத்துமீறல் தாக்குதலில் ரஜோரியில் 3 பேர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.