விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்களுக்கு மரியாதை இல்லை எனக்கூறி, திமுக, அதிமுக கவுன்சிலர்கள் ஒன்றியக்குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஒன்றியக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக கவுன்சிலர் சத்தியராஜ், ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை, கவுசிலர்களுக்கு அளிக்கப்படுவதில்லை எனக் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து அதிமுக கவுன்சிலர் ரேவதியும் தான் முடித்த பணிகளுக்கான தொகை இதுவரை வழங்கப்படவில்லை எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டார்.
தொடர்ந்து திமுக, அதிமுக கவுன்சிலர்கள் ஒன்றன்பின் ஒருவராக வெளிநடப்பு செய்த நிலையில், அதிகாரிகள் அவர்களைச் சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வந்து கூட்டத்தை நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் அசாதாரண சூழல் நிலவியது.