12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், இன்று, தமிழகத்தில் வெளியாகியுள்ள 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
மாணவச் செல்வங்கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான உயர்கல்விப் பாடங்களை தேர்வு செய்து பயின்று, தேசத்தின் வளமான எதிர்காலமாக உருவெடுக்க வாழ்த்துகிறேன் என்றும், தேர்வில் வெற்றி பெறாத மாணவர்கள் அனைவரும் சோர்வுறாமல் முயற்சி செய்து, மறுதேர்வில் வெற்றி காண வேண்டுகிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.