ப்ளஸ் – 2 பொதுத்தேர்வில் முடிவுகள் – வெற்றி பெற்றவர்களுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வில் வெற்றி பெற்று, உயர் கல்விக்குச் செல்லவிருக்கும் மாணவ மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் துவண்டு விடாமல், வரும் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் துணை நிலைத் தேர்வுக்கு, முழு நம்பிக்கையுடன் தங்களைத் தயார் செய்து, தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
பல்வேறு வாய்ப்புகளும், புதிய துறைகளும் உருவாகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், மாணவ மாணவியர் அனைவருக்கும் சிறப்பானதொரு எதிர்காலம் காத்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாணவ, மாணவியர் அனைவரும், உயர்கல்வியில் தாங்கள் விரும்பும் துறையைத் தேர்ந்தெடுத்து, சாதனை படைக்க இறைவன் அருள் புரியட்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.