12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 98.82 சதவீத தேர்ச்சியுடன் அரியலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன்படி, 98.82 சதவீத தேர்ச்சி உடன் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
இதனை அடுத்து 97.98 சதவீதம் தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 97.53 சதவீதம் தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும், 97.48 சதவீதம் தேர்ச்சி பெற்று கோயம்புத்தூர் மாவட்டம் நான்காவது இடத்தையும், 97.01 சதவீதம் தேர்ச்சி பெற்று கன்னியாகுமரி ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.