காஷ்மீர் பிரச்சனைக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றுப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த தலைமையை எண்ணிப் பெருமைப்படுவதாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எட்ட அமெரிக்கா உதவியாக இருந்ததை எண்ணி மகிழ்ச்சியடைவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இரு நாடுகள் எடுத்த முடிவால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள ட்ரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை அதிகரிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆயிரம் ஆண்டுகளாக நீடிக்கும் காஷ்மீர் பிரச்சனைக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் என்றும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றத் தயார் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.