லாவா நிறுவனம் தனது சமீபத்திய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான லாவா யுவா ஸ்டார் 2 என்ற மொபைலை இந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் லாவா யுவா ஸ்டார் 2 மொபைலின் விலை 6,499 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மொபைல் 4GB ரேம் + 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட்டில் வருகிறது. புதிய யுவா ஸ்டார் 2 ஆண்ட்ராய்டு 14 கோ வெர்ஷனில் இயங்குகிறது.
இது ரேடியன்ட் பிளாக் மற்றும் ஸ்பார்க்லிங் ஐவரி கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.